ஞாயிறு, 23 டிசம்பர், 2018

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன? December 23, 2018

source: ns7.tv

Image

டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற 31வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 23 பொருட்களுக்கு, ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. 
கணினி திரைகள், 32 இன்ச் வரையிலான தொலைக்காட்சி பெட்டிகள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி 28% இருந்து  18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
லித்தியம் பேட்டரிகளால் ஆன சக்தி சேமிப்பான், டிஜிடல் கேமரா மற்றும் வீடியோ ஒளிப்பதிவு ரெக்கார்டர்ஸ் உள்ளிட்டவைக்கும் 28% இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட ரப்பர் டயர்கள், திட மற்றும் குஷன் டயர்கள், 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட் கட்டணம் ஆகியவற்றும் ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
28% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்:
இதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி உதிரிபாகங்கள் 28% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
18% இருந்து 12% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்:
இயற்கையான தக்கைகள் (CORK), தக்கையில் உருவான பொருட்கள் (Articles of Natural Corks), திரட்டப்பட்ட தக்கைகள் (Agglomerated Cork) ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 18% இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 18% இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்:
சலவைக்கல் துண்டுகளுக்கான (Marbles) ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்: 
முதியோர் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோலுக்கு ஜிஎஸ்டி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இசை புத்தகங்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று உறைந்த காய்கறிகள், தற்காலிகமாக பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் ( Packed Vegetables)  ஆகியவற்றுக்கு 5 சதவீதமாக இருந்து ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.