குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வழங்கியதாக, குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் உள்ளிட்ட ஆறு பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை, விஜயபாஸ்கர் இன்று சந்தித்து பேசினார். சிபிஐ விசாரணை விபரங்கள் குறித்து முதலமைச்சரிடம் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருப்பார் என தெரிகிறது.
source: ns7,tv