வெள்ளி, 21 டிசம்பர், 2018

காங்கிரஸ் தலைமையிலான பீகார் மெகா கூட்டணியில் இணைந்தார் உபேந்திரா குஷ்வாஹா! December 21, 2018

source: ns7.tv
Image

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குஷ்வாஹா நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தார். 
பீகார் மாநிலத்தை அடிப்படையாக கொண்ட ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்நிலையில் வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என பாஜக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இடஒதுக்கீட்டில் பிரச்னை எழுந்ததால் அதிருப்தி அடைந்த குஷ்வாஹா சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 
இதையடுத்து, டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையிலான பீகார் மெகா கூட்டணியில் அவர் இணைந்தார். வெறும் தேர்தலுக்காக மட்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையவில்லை என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், தங்கள் கட்சிக்கும் ஒரே கொள்கைகள் உள்ளன என்றும், குஷ்வாஹா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் லோக்தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.