ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கடற்கரை ஓரங்களில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் அச்சம்! December 16, 2018

Image

பெய்ட்டி புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, சென்னை பழவேற்காடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. அதனால், மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பழவேற்காடு ஏரி பகுதியிலும் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வானவன் மகாதேவி, சிறுதலைக்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெத்தை புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கடற்கரை ஓரங்களில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தரைக் காற்று பலமாக வீசி வருவதுடன், வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 
source: ns7.tv