வெள்ளி, 14 டிசம்பர், 2018

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 960 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் December 14, 2018

Image

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 960 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதனால் வரும் 16-ம் தேதி ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. 
 
source: ns7.tv