திங்கள், 13 மே, 2019

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பிரதமர் மோடி மட்டமான அரசியல் செய்கிறார்: மாயாவதி May 13, 2019

Image
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பிரதமர் மோடி மட்டமான அரசியல் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 
அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ஆல்வார் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலை கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த மாயாவதி, ஆல்வார் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அமைதி காத்த மோடி, அதுகுறித்து தாம் பேசிய பிறகே, மவுனம் கலைத்தாக  கூறினார்.  அரசியல் லாபத்திற்காக, பாலியல் வன்கொடுமை விவகாரத்திலும், மோடி மட்டமான அரசியல் செய்வதாக மாயாவதி சாடினார். 
அரசியல் ஆதாயத்திற்காக தமது மனைவியை பிரிந்த அவர், மற்ற பெண்களுக்கு எப்படி மதிப்பளிப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Posts: