திங்கள், 31 டிசம்பர், 2018

பிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க கோரிக்கை! December 30, 2018

source ns7.tv ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்று மூடப்படும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  சென்னையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து பிளாஸ்டிக் உற்பதியாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் சங்கரன், முதலில்...

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் மரணம்...! December 31, 2018

source ns7.tv கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவரது உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு, ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை...

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! December 31, 2018

source ns7.tv விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.  விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கண்டித்து, 8 மாவட்டங்களில், கடந்த 17ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வரும் 3-ம் தேதி, சென்னை சேப்பாக்கம்...

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்! December 30, 2018

source: ns7.tv கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட படகுகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர்களா நீங்கள்?...உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! December 30, 2018

source ns7.tv சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர், திங்கள்கிழமைக்குள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும், என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.  தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன? December 30, 2018

source ns7.tv தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த பொருட்களுக்கு அந்த தடை என்பது பற்றி பெரும்பாலானோர் சந்தேகமாக கேள்வி எழுப்பிவருகின்றனர். அதனை பற்றிய செய்தி... தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன? ➤உணவகங்களில், உணவுப் பொருட்களை...

முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பாஜக! December 30, 2018

source ns7.tv முத்தலாக் மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முத்தலாக் அவசர சட்டம்... இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் நாளை இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறது மத்திய பாஜக அரசு... மக்களவையில் கடும் அமளிக்கு இடையில் இந்த மசோதாவை...

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்துவது என தெரியாமல் தவிப்பவரா நீங்கள்? December 30, 2018

source ns7.tv ➤ பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காலங்காலமாக உணவருந்த பயன்படும் வாழையிலையை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.  ➤ நகரங்களில் சுப நிகழ்ச்சிகளில் நின்று கொண்டு சாப்பிடுவதற்கு பாக்குமர இலையும் பயன்படுத்தலாம்.  ➤ உணவகங்களில் பார்சல் கட்டுவதற்கு அலுமினியத்தாள்  காகித சுருள் அல்லது தாமரை இலைகள்  உபயோகப்படுத்தலாம்.  ➤ கண்ணாடி குவளைகள் அல்லது...

சனி, 29 டிசம்பர், 2018

1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போட்! December 29, 2018

source ns7.tv பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது என போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள காவல்நிலைய குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் மதுவை போலீசார் வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை குடோனுக்கு சென்ற காவலர், மது பாட்டில்களில் இருந்த...

உச்சகட்டத்தை எட்டிய புதுவை ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல்! December 29, 2018

source: ns7.tv புதுவையில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையிலான அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இலவச ரேசன் அரிசி வழங்கும் விவகாரம் தொடர்பாக இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இன்று மீண்டும்...

நாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்! December 29, 2018

நாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வாகனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான, அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக, மோட்டார் வாகன விதிகள் 1989-ல் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 2019 ஏப்ரல் 1 முதல்,...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை! December 29, 2018

source: ns7.tv குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்சோ என அழைக்கப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்...

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! December 28, 2018

source ns7.tv 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 வல்லரசு நாடுகள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அந்தப்பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி...

குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளதா தமிழக அரசு? December 29, 2018

source: ns7.tv தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவல், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால், பாதுகாக்கப்பட்டு வந்த சத்துணவு திட்டத்தை, தற்போதைய அரசு நிறுத்தவுள்ளதா? தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் என்பது, 1925-ம் ஆண்டு...

அழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து அசத்திவரும் இயற்கை விவசாயி! December 29, 2018

source: ns7.tv மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்தினரிடம் இருந்து அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை வாங்கி அதனை விதைத்து அதிக மகசூல் ஈட்டிவருகிறார் இயற்கை விவசாயி ஒருவர். ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பாவனி கால்வாயில் பாசனத்துக்காக திறக்கபடும் நீரை கொண்டு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. இந்த நீரைக் கொண்டு கீழ்பாவனி...

வெள்ளி, 28 டிசம்பர், 2018

சாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கொடூரம்...கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்டது அம்பலம்! December 28, 2018

source ns7.tv சாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அம்பலமாகியுள்ளது.  சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட செய்தியின் ரணம் ஆறுவதற்கு உள்ளாகவே, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதால் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு வந்தாக மற்றொரு பெண் புகார் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி...

மாநிலங்களவையில் வெல்லுமா முத்தலாக் மசோதா? December 28, 2018

நான்கு மணி நேர நீண்ட விவாதத்திற்கு பிறகு முத்தலாக் தடை மசோதா மக்களவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தை சூடாக்கிய முக்கிய மசோதாக்களில் ஒன்றாக முத்தலாக் தடை மசோதா மாறியுள்ளது. திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல்...

அடி பணிகிறாரா சந்திரசேகர ராவ்? பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறாரா? December 28, 2018

source: ns7.tv பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்கும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் - பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைக்கும் விமர்சனங்களுக்கு என்ன காரணம்?  நாடாளுமன்ற தேர்தலை நிர்ணயிக்க கூடிய சக்திகளாக - சந்திர சேகர ராவ் - சந்திரபாபு நாயுடு - மு.க.ஸ்டாலின்...

வியாழன், 27 டிசம்பர், 2018

அஸ்ஸாமில் சூடு பிடிக்கும் எலிக்கறி விற்பனை..

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குமரிகட்டா பகுதியில், எலிக்கறி விற்பனை மிக தீவிரமாக நடந்துவருகிறது. குமரிகட்டா பகுதியில் உள்ள வவிவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் இருக்கும் எலிகளை பிடித்துவந்து, அதன் தோலை உரித்து, காரசாரமான மசாலா தடவி விற்பனை செய்துவருகின்றனர். கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறியை விட எலிக்கறி அதிக அளவில் விற்பனையாகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அப்பகுதியில்,...

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்! December 27, 2018

source; ns7.tv ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? ரத்தம் கொடுக்கக்கூடிய கொடையாளியின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும். ரத்தம் தானம் கொடுப்பவர், குறைந்தது ஆறு மாதம் இடைவெளிக்கு பின் தான், அடுத்த ரத்த தானம் வழங்க வேண்டும்.  ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும். குறிப்பாக ரத்த தானம் கொடுப்பவருக்கு,...

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள்...! December 27, 2018

வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலாகவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பண்டைய காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட மண் சட்டி, மண் அடுப்பு, தண்ணீர் குவளை ஆகியவற்றை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக ஈயம், சில்வர் என மாறி...

மணப்பெண் பற்றாக்குறையால் திணறும் சீன இளைஞர்கள்! December 27, 2018

source ns7.tv மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பணம் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பெண்களை வாங்கும் நிலைக்கு சீன இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இரும்புத்திரை தேசம் என வர்ணிக்கப்படும் சீனாவில், பெண்களுக்கு எதிரான அரசின் பாலின நடவடிக்கைகள், பாலின விகிதாச்சாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருந்த சீனா, மக்கள் தொகையைக்...

புதன், 26 டிசம்பர், 2018

குட்கா வழக்கில் விரியும் வலை: சிக்கப்போவது யார்? December 25, 2018

source ns7.tv தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள குட்கா ஊழல் வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு  குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்த பிறகும் அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ-யின்...

14 ஆண்டுகளாகியும் அழியாத சுனாமி ஆழிப்பேரலையின் சுவடுகள்! December 26, 2018

source ns7.tv தெற்காசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, சுமார் இரண்டரை லட்சம் உயிர்களை காவு வாங்கியது. அந்த தாக்குதல் நிகழ்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.  2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள். உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிந்தது அந்த நாள். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த அடுத்தநாள் அது. இந்தியக் கடலோர நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள்...

சோலார் தகடுகள் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த விசாகப்பட்டினம் மாநகராட்சி! December 26, 2018

source ns7tv நாட்டிலேயே முதல்முறையாக நீரில் மிதக்கக்கூடிய சோலார் தகடுகளை அமைத்து, விசாகப்பட்டினம் மாநகராட்சி 2 மெகாவாட் மின்சாரத்த்தை உற்பத்தி செய்துள்ளது.  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள ஏரியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய...

செவ்வாய், 25 டிசம்பர், 2018

வாஸ்கோடகாமா

source ns7.tv வாஸ்கோடகாமா நினைவு தினம் இன்று! வரலாற்றின் பெரும் பகுதி ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகத்தான் இந்தியா இயங்கிவந்தது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு போக்குவரத்தே, அனைத்து  அரசாங்கமும் போக்குவரத்திற்கு அதிகம் செலவிடுவது கூட நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான்,அதே நேரம் வழித்தடங்களும்,நேரம்,செலவு என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது...

பழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார்! December 25, 2018

source: ns7.tv நீலகிரி மாவட்டதில் தோடர் பழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  உதகையில் உள்ள பவானீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சில போலீசார் தோடர் பழங்குடியின ஆண்களை தரக்குறைவாக பேசியதாக...

அரை நூற்றாண்டை கடந்தாலும் அழியாத வடு : கீழ்வெண்மணி படுகொலை! December 25, 2018

source: ns7.tv அரை நூற்றாண்டை கடந்துவிட்டாலும்  மக்கள்  மனதில் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது கீழ்வெண்மணி படுகொலை சம்பவம். என்ன நடந்தது என்பதை பற்றி தற்போது விரிவாக காண்போம். 1968 டிசம்பர் 25ம் நாள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாய கூலிகளைத் தாக்கினார்கள்.  நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் இருந்த "ராமையன்" என்பவரின் குடிசைக்குள்...

புகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.80,000 கோடி செலவு! December 25, 2018

நாடு முழுவதும் பீடி புகைப்பழக்கத்தால் எவ்வளவு செலவாகிறது? புகைபிடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா? பீடி, புகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு  80,000 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்படுகிறது. தேசிய புகையிலை தடுப்பு மையம் (NTCP) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பொது கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ரிஜோ.எம்.ஜான் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது. பீடி...

"விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார்" - விஜயபிரபாகரன் December 25, 2018

source: ns7.tv தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.  தேமுதிக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்...

பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் குமாரசாமி! December 25, 2018

source ns7.tv ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தொலைபேசியில் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி தொலைபேசியில் ஒருவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாகியது.  மதச்சார்பற்ற...