சனி, 1 செப்டம்பர், 2018

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு: இதனால் ஏற்படவிருக்கும் அபாயம் என்ன? September 1, 2018

Image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஏன் இந்த வீழ்ச்சி, இதனால் ஏற்படவிருக்கும் அபாயங்கள் என்ன?

➤டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ரூ.70.95  வரை சரிவடைந்துள்ளது. 

➤துருக்கியின் கரன்சி லிரா கடும் சரிவை சந்தித்து வருவதால் டாலருக்கு நிகரான மற்ற கரன்சிகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. 

➤அமெரிக்க மெக்சிகோ வர்த்தக உடன்பாட்டால் ஆசிய நாடுகளின் கரன்சி சரிவடைந்து வருகிறது. 

➤சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக போரும் ஒரு காரணம். 

➤சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் கடந்த 3 மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு சரிவடைந்துவருகிறது.

➤ரூபாயின் மதிப்பு சரிவால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  
 
➤பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் காய்கறி, பால், பழங்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

➤வங்கி கடன் சேவைகளின் வரி உயரும்; வெளிநாடு செல்வோர், அங்கிருப்போரின் செலவுகள் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.