திங்கள், 8 அக்டோபர், 2018

இந்திய விமானப்படை தினம் இன்று! October 8, 2018

Image

உலகின் மிக சக்திவாய்ந்த விமானப்படைகளுள் ஒன்றாக திகழும் இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுவரை பல போர்களை சந்தித்து வெற்றி கண்டுள்ள இந்திய விமானப்படையானது 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் தொடங்கப்பட்டது. 86வது இந்திய விமானப்படை தினமான இன்று, இந்திய விமானப்படை பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

1. உலகின் நான்காவது பெரிய விமானப்படை இந்திய விமானப்படையே. அமெரிக்கா, ரஷ்யா, சீனா முதலிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. 1500 போர் விமானங்களுடன் மிக பிரம்மாண்டமான தோற்றத்தை உடையது இந்திய விமானப்படை.

2. உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது வாங்கிய ஒரே விமானப்படை அதிகாரி நிர்மல் ஜித் சிங் சேகான். 1971ல் நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரின் போது இவர் ஆற்றிய சேவை வரலாற்றில் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. 

3. இந்திய விமானப்படையின் முதல் பெண் 3ம் நிலை அதிகாரி பத்மாவதி பண்டோபாத்யாய். 

4. மோஹனா சிங், பாவனா காந்த், அவானி சதுர்வேதி உள்ளிட்ட மூவர், இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகள். இவர்கள் ஜூன் 2016ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு அரணாக திகழும் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை வீரர்களுக்கான இந்த தினத்தில் அவர்களின் அயராத பணிக்கு தலைவணங்கி வாழ்த்து தெரிவிப்போம்.