சவுதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.
சவுதி அரேபியாவின் Alawaal மற்றும் Saudi British ஆகிய இரண்டு வங்கிகள் அண்மையில் இணைக்கப்பட்டு புதிதாக ஒரு வங்கி உருவாக்கப்பட்டது. இது அந்நாட்டின் 3வது பெரிய வங்கியாகும். இந்த வங்கியின் தலைவராக Lubna Al Olayan (வயது 63), நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டில் பிரபலமாக விளங்கி வரும் ஒரு பெண் தொழிலதிபர் ஆவார்.
சவுதி அரேபியாவின் வங்கிக்கு பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
Lubna Al Olayan கடந்த 2004ஆம் ஆண்டு, Hollandi வங்கியின் இயக்குனர்கள் குழுவில் இடம்பெற்றபோது சவுதியின் பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
அதே ஆண்டில் Jeddahவில் நடைபெற்ற பொருளாதார மன்றத்தில் உரையாடியதன் மூலம் அக்கூட்டத்தில் உரையாற்றும் முதல் சவுதி பெண் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர் அடுத்த ஆண்டிலேயே ஸ்விர்சர்லாந்து நாட்டின் Davos, நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார நிதியத்தின் கூட்டத்திலும் உரையாற்றினார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 2018ஆம் ஆண்டுக்கான மத்திய கிழக்கு நாடுகளின் மிகவும் செல்வாக்கான பெண்மணிகளின் பட்டியலில் Lubna Al Olayan முதல் இடம் பெற்றார். இதே பத்திரிக்கை 2014ல் வெளியிட்ட உலகின் செல்வாக்கான பெண்மணிகளின் பட்டியலில் இவர் 86வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவின் நிதித்துறையில் பெண்களில் Lubna Al Olayan முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சவுதி விஷன் 2020 என்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் அண்மையில் பெண்களுக்கு கார்கள் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.