செவ்வாய், 11 டிசம்பர், 2018

5 மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கூறுவது என்ன? December 11, 2018

Image

source ns7.tv

5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
டைம்ஸ் நவ் - சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 
காங்கிரஸ் கட்சி 105 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக 85 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் தெரியவந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 
இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் 119 முதல் 141 தொகுதிகளில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 முதல் 72 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
மத்தியப்பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. டைம்ஸ் நவ் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில், பாஜக - 126 தொகுதிகளையும், காங்கிரஸ் - 89 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் 112 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருக்கும் பாஜக 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில், 
காங்கிரஸ் 102 முதல் 120 தொகுதிகளிலும், பாஜக 104 முதல் 122 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.