ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

அமெரிக்காவில் கல்லூரியின் கணிப்பொறிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை! April 20, 2019

source ns7.tv
Image
அமெரிக்காவில் வைரஸ் புரோகிராமை பயன்படுத்தி தான் படித்து வந்த கல்லூரியின் கணிபொறிகளை செயலிழக்கச்செய்த இந்திய மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் விஸ்வநாத் அகுதோடா (வயது 27), மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றுள்ள இவர், நியூயார்க் மாகாணத்தின் தலைநகரான அல்பேனியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வருகிறார்.
தான் படித்து வந்த கல்லூரியின் கணிபொறிகளை வேண்டுமென்றே செயலிழக்கச் செய்ததாக கடந்த பிப்ரவரியில் இவர் வடக்கு கரோலினாவில் கைது செய்யப்பட்டார்.
மாணவர் விஸ்வநாத் "USB Killer" என்ற சாதனத்தை பயன்படுத்தி கடந்த பிப்ரவரி 14ம் தேதி கல்லூரியின் 66 கணிப்பொறிகள், என்னற்ற மானிட்டர்கள், இதர சாதங்களை செயலிழக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
கணிப்பொறியின் யூஎஸ்பி போர்ட்டில் "USB Killer" சாதனத்தை பொருத்தும் போது, அதன் மூலம் அனுப்பப்படும் கட்டளைகள் கணிப்பொறியின் ஆன்-போர்டு மின்தேக்கிகளை (capacitor) வேகமாக மின் ஊக்கம் (Rapid Charge) செய்தும், வெளியேற்றம் (Discharge) செய்யவும் வைக்கிறது. இதன் மூலம் கணிப்பொறியின் மின் அமைப்பு அழிக்கப்படுகிறது.
இதனை தான் வேண்டுமென்றே செய்ததாகவும், இந்த செயல்களில் தான் ஈடுபடும் போது "I'm going to kill this guy" என்று பேசி தனது ஐ-போனில் வீடியோ பதிவு செய்து கொண்டதாகவும் மாணவர் விஸ்வநாத் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதன் மூலம் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள கணிப்பொறிகள் சேதமாகியுள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணை நிறைவடைந்து தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மாணவர் விஸ்வநாத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், USD 250,000 ( இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.