திங்கள், 22 ஏப்ரல், 2019

கும்பகோணம் அருகே ராஜராஜ சோழன் நினைவிடம் உள்ளதாக கருதப்படும் பகுதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு! April 22, 2019

Image
கும்பகோணம் அருகே உடையாளூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் நினைவிடம் உள்ளதாக கருதப்படும் பகுதியில் மாநில தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன், கி.பி. 1014ம் ஆண்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் சமாதியானதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் உடையாளூரில் கள ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த கள ஆய்வில் ஆளில்லா விமானம் உள்ளிட்ட நவீன உபகரணங்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source ns7.tv