.சிறுவர் சிறுமிகள் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய கூடாது என்ற நிபந்தனையுடன் தடையை நீக்கி உத்தரவு. tic tac நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறும்பட்சத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கும் உரிமையியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும்- நீதிபதிகள் எச்சரிக்கை
துரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தற்போது "Tik Tok" செயலி நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது. இந்த செயலி சைனா நாட்டில் 2016 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் செயல்பட்டுவருகிறது,.2018 ம் ஆண்டின் கள ஆய்வில் 500 மில்லியனுக்கு அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.
source ns7.tv
கடந்த 2019, பிப்ரவரி மாதம், "Tik Tok" செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. "Tik Tok" செயலியை பல இளைஞர்கள் தவறான பாதையில் பயன்படுத்திக்கிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி "Tik Tok" செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், Tic tok செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து, டிக் டாக் தொடர்பான வீடியோக்களை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது "டிக் டாக்" தரப்பில்,"நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த பின்னர், ஆறு மில்லியன் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் தவறான நோக்கிலோ, அல்லது ஆபாசமாகவோ வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டால், அது பதினைந்து நிமிடங்களிலேயே அகற்றப்படுகிறது. இந்திய அரசின் கருத்துரிமை விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்கி வருகிறது. இதற்கு தடை விதிப்பதால் சுமார் 250 நேரடி பணியாளர்களும் 5000 மறைமுக பணியாளர்களும் வேலையை இழக்கும் நிலை உருவாகி உள்ளது என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள்," இந்தியாவில் சிறுவர்-சிறுமியர்களை பாதுகாப்பதற்கென சரியான சட்டங்கள் இல்லை" என கருத்து தெரிவித்தனர்.இதற்கிடையே, மத்திய மின்னணு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்," கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சட்ட முன் வரைவு தயாராக உள்ளது. குழந்தைகளின் தனி உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்ட முன்வரைவு தயாராக உள்ள நிலையில், வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதலுக்காக வைக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து டிக்டாக் தரப்பில்,"மேலும், facebook whatsapp செயலிகளைவிட, tic tac செயலியில் அதிக பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் செயலியிலேயே, தானாக முன் வந்து நீக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து இந்த செயலி தொடர்பாக இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. தற்போது இந்தியாவிற்கு என புகார் தெரிவிப்பதற்கு. தனி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக்கூடாது" என வாதிடப்பட்டது .இதையடுத்து நீதிபதிகள், tic tac செயலியை பதிவிறக்கம் செய்யலாம், ஆனால் tic tac நிறுவனம் சிறுவர் சிறுமிகள் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என உறுதி மொழியை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து டிக் டாக் நிறுவனம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும், பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் ஆகியோரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்டால், அவற்றை செயலியே அகற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறும் பட்சத்தில் மனிதர்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டை பொருத்த வரை 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைனர் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் இந்தியாவை பொருத்தவரை 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் மைனர் பிரிவில் சேர்க்கப்படுவர். டிக் டாக் செயலி தொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிப்பதற்கு என நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் டிக் டாக் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். அதே நேரத்தில் tic tac நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறும்பட்சத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கும் உரிமையியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.