வியாழன், 25 ஏப்ரல், 2019

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் : காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்! April 25, 2019

Image
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை கொய்ருனிசாவை((Choirunnisa)) 21க்கு 15, 21க்கு 19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 
இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21க்கு 13, 21க்கு 13 என்ற நேர் செட் கணக்கில் கொரிய வீராங்கனை கிம்மை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

source: ns7.tv