நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது. அதில், மேற்கு வங்காளத்தில் 81 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 66 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கரில் 56 சதவீதம், உத்தரகாண்டில் 57.85 சதவீதம், காஷ்மீரில் 54.49 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் 50 சதவீதம், மகாராஷ்டிராவில் 56 சதவீதம், ஒடிஷாவில் 68 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், லட்சத்தீவுகளில் 66 சதவீத வாக்குகளும், அந்தமானில் 70.67 சதவீத வாக்குகளும், மிசோரமில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.