வியாழன், 25 ஏப்ரல், 2019

ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் தேங்கிய பிளாஸ்டிக் அகற்றம்! April 25, 2019

Image
ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பாக் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் உள்ள குப்பைகளை அகற்ற வனத்துறையினர் திட்டமிட்டனர். 
இதற்காக வனத்துறையை சேர்ந்த 2 பெண் உட்பட 10 பேர் ஸ்கூபா நீச்சல் மூலம் கடலுக்கு அடியில் சென்று பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இந்த வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

source ns7.tv