புதன், 17 ஏப்ரல், 2019

வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்...! April 16, 2019

Image
பணம் பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக. இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது.
நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும், தயாராக இருந்த நிலையில், தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது, ஜனநாயக படுகொலை என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தை சீரமைக்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்
source ns7.tv