வியாழன், 18 ஏப்ரல், 2019

தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே நிர்வகிக்கும் வாக்கு மையங்கள் அறிமுகம்! April 18, 2019

source ns7.tv
Image
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 2ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேலூர் மக்களவை தொகுதி ரத்தானதை அடுத்து, தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 14 தொகுதிகளிலும் தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே நிர்வகிக்கும் வாக்கு மையங்கள் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
இதில் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர், துணை வாக்குச்சாவடி அலுவலர், உதவி வாக்குச்சாவடி அலுவலர், மை வைப்பவர், வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பவர் என அனைத்து அலுவலர்களுக்கும் பெண்களாகவே உள்ளனர். சென்னையில் உள்ள மேற்கு மாம்பலம் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடியாக உள்ளது.