செவ்வாய், 23 ஏப்ரல், 2019

விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் களைகட்டும் பனை நுங்கு விற்பனை! April 23, 2019

Image
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், பனை நுங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 
கோடைகாலம் தொடங்கி, வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்த நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் மழை இல்லாமல் வெயில் வாட்டி வருகிறது. வெயிலுக்கு இதமாக, குளிர்பானங்களும், இளநீர், தர்பூசணி போன்றவற்றை பொதுமக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில், நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 10 ரூபாய்க்கு 2 நுங்குகள் என விற்கப்படும் நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
source ns7.tv

Related Posts: