source ns7.tv
பூமியின் மேற்பரப்பில் நிலவும் காற்றின் ஈரப்பதம் குறித்து ஆராயும் பலூன் செயற்கைக்கோளை, தஞ்சாவூர் கல்லூரி மாணவிகள் விண்ணில் ஏவினர்.
தஞ்சாவூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் “மணியம்மையார் சாட்“ என்ற பெயரில் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் செயற்கைக்கோளை பொருத்திய மாணவிகள் அதை விண்ணில் செலுத்தினர். சுமார் 70 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, பலூன் செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் நிலவும் காற்றின் ஈரப்பதம், வாயுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, பூமியின் மேற்பரப்பை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.