திங்கள், 15 ஏப்ரல், 2019

நாட்டிலேயே அதிக பணம் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி! April 15, 2019

source ns7.tv
Image
நாட்டிலேயே அதிக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ள கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி தனது நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அக்கட்சி 669 கோடி ரூபாய் நிதியை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.டெல்லியில் உள்ள 8 பொதுத்துறை வங்கிகளில் இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிக நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ள கட்சிகளில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்த இடத்தில், சமாஜ்வாதி கட்சி உள்ளது. இக்கட்சி, 471 கோடி ரூபாய் நிதியை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது.
நாட்டின் மிகப்பழமையான கட்சியான காங்கிரஸ், தனது வங்கிக் கணக்கில் 196 கோடி ரூபாய் நிதி உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு காண்பித்துள்ளது.107 கோடி ரூபாய் நிதியுடன் தெலுங்கு தேசம் கட்சி 4வது இடத்திலும்,82 கோடி ரூபாய் நிதியுடன் பாஜக 5வது இடத்திலும் உள்ளன.
கட்சிகளின் வைப்புத் தொகை:

ரூ. 669 கோடி வைப்புத் தொகையுடன் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்
ரூ. 471 கோடி வைப்புத் தொகையுடன் சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடம்
ரூ. 196 கோடி வைப்புத் தொகையுடன் காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடம்
ரூ. 107 கோடி வைப்புத் தொகையுடன் தெலுங்கு தேசம் கட்சி 4ம் இடம்
ரூ. 82 கோடி வைப்புத் தொகையுடன் பாஜக 5ம் இடம்