ns7.tv
மாரடைபால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய தேர்தல் அலுவலரின் உயிரை போனிலேயே ஆலோசனை பெற்று CRPF வீரர் ஒருவர் காப்பாற்றியிருக்கும் நிகழ்வு காஷ்மீரில் அரங்கேறியுள்ளது.
நடைபெற்று பெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் ஒரு அங்கமாக இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த ஏப்ரல்-18ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்தின் புச்போரா பகுதில் உள்ள பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் ஒருவருக்கு காலை 9 மணியளவில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அடுத்த நிமிடமே அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார்.
அப்போது அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர் குமார் என்பவர் அவசர மருத்துவ உதவியை நாடியுள்ளார். அது பலனளிக்காமல் போகவே சமயோசிதமாக செயல்பட்டு தனது சீனியரான டாக்டர்.சுனீத் கான் என்பவரை மொபைலில் தொடர்பு கொண்டார்.
தேர்தல் அலுவலரின் நிலையை டாக்டரிடம் எடுத்துரைத்த போது, அடுத்த 45 நிமிடங்களுக்கு எந்த வகையில் அவசர சிகிச்சை அளிப்பது என்பது குறித்து டாக்டர் சொல்ல சொல்ல அதனை அவ்வாறே செய்துள்ளார். இடையில் ஆம்புலன்ஸையும் அவர் வரவழைத்தார்.
ஆம்புலன்ஸ் வரும் வரையில் டாக்டர் கூறியவாறே முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாலேயே தேர்தல் அலுவலரின் உயிர் காக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த 45 நிமிடங்களில் cardiopulmonary resuscitation (CPR), mouth-to-mouth respiration போன்ற அவசர முதலுதவிகளையும், 30 compressionகளையும் CRPF வீரர் குமார் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது