வியாழன், 11 ஏப்ரல், 2019

முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் பணக்கார - ஏழ்மையான வேட்பாளர்கள் யார்? April 10, 2019

Authors
Image
91 தொகுதிகளுக்கான பாராளுமன்றத்திற்கான முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் என சுமார் 1,300 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதனிடையே தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, முதல்கட்ட தேர்தலில் பணக்கார மற்றும் ஏழ்மையான வேட்பாளர்கள் குறித்து ஆராய்ந்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி தெலங்கானா மாநிலத்தின் Chevella தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டி இந்த பட்டியலில் பணக்கார வேட்பாளர் என தெரியவந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு 895 கோடி ரூபாயாகும்.
ரெட்டி பெயரில் 223 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் 36 கோடி ரூபாய்க்கு அசையாத சொத்துக்களும், அவரது மனைவி சங்கீதா ரெட்டி (அப்போலோ குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனர்) பெயரில் 613 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துகளும், 1.81 கோடி ரூபாய்க்கு அசையாத சொத்துக்களும், இவர்களது மகன் பெயரில் 20 கோடி அசையும் சொத்துகளும் உள்ளன.
அதிக சொத்து மதிப்பு உள்ளவர்கள் பட்டியியலில் கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் விஜயவாடா தொகுதி வேட்பாளரான பிரசாத்.வி.பொட்லூரி உள்ளார். இவர் சினிமா உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோன்று மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களில் தெலங்காவின் Chevella தொகுதி ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் நல்ல பிரேம் குமார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 500 ரூபாய் மட்டுமே.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளரும், ஏழ்மையான வேட்பாளரும் ஒரே தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இதில் சுவாரஸ்யம் அளிக்கும் தகவலாக உள்ளது.
யார் பணக்காரர் யார் ஏழை?
source ns7.tv