புதன், 24 ஏப்ரல், 2019

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! April 24, 2019

source ns7.tv
Image
பச்சையப்பன் கல்லூரி முதல்வர்  தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் 6 கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் காளிராஜ் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு என். சேட்டு என்பவர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கல்லூரி பேராசிரியர்கள் நந்தினி உட்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது,  பல்கலைகழக மானிய குழு விதிகளை பின்பற்றாமல் தேர்வு குழு அமைக்கப்பட்டதாகவும், பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் பச்சையப்பா கல்லூரியின் தற்காலிக நிர்வாகி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேட்டுவின் நியமத்தை ரத்து செய்து உத்தரவு. கல்லூரி முதல்வர் பதவிக்கு விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி,  இடைக்கால நிர்வாகிக்கு  உத்தரவிட்ட நீதிபதி, தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், ஊழல் நடவடிக்கைகள் சமூதாயத்தில் புற்றுநோய் போல பரவுகிறது எனவும், நேர்மையில்லாமல் நியமிக்கப்பட்ட ஒருவர், நேர்மையாக செயல்படுவார் என எதிர்பார்க்க முடியாது.  உன்னத நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் பாவம் இழைத்துவருகின்றனர் என  நீதிபதி வேதனை தெரிவித்தார்