நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 22.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரகாண்ட்டில் 23.78 சதவீதமும், லக்ஷத்தீவில் 23.10 சதவீதமும், மகாராஷ்ட்ராவின் 7 தொகுதிகளில் 13.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு மற்றும் பாரமுல்லா தொகுதிகளில் 24.66 சதவீதமும், மேற்கு வங்கத்தின் 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38.08 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. திரிபுராவில் ஒரு தொகுதியில் 26.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா பகுதியில் நக்ஸலைட்டுகளின் எதிர்ப்பையும் மீறி, வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தண்டேவாடா பகுதியில், பாஜக எம்எல்ஏ பீமா மாண்ட்வியும், அவரது பாதுகாவலர்கள் 4 பேரும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், இன்று அப்பகுதியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
source : ns7.tv