ns7.tv
இலங்கையில் மூன்று தேவாலயங்கள் உள்பட ஆறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறியதில், பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதேபோன்று சங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்புகளால் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து,கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குழும்பு குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது எனவும் அங்கே அமைதி திரும்பவேடும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்