source ns7.tv
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொட்டாரம், சுசீந்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு.
அப்போது நமது செய்தியாளருடன் பேசிய அவர், "தமிழகத்தில் காங்கிரஸ்க்கான ஆதரவு நல்லபடியாக உள்ளது. மத்தியில் மீண்டும் மோடி வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் உற்சாகமாக உள்ளனர்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது மக்கள் மத்தியில் எழுச்சியை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி அமைத்தால்தான் வெற்றிபெற முடியும். மோடி ஆட்சிக்கு வரும்முன் இந்தியாவை சிறந்த நாடாக வைத்திருந்தோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன.?
பாஜக செய்த சாதனைகளை சொல்லாமல் மதம் பற்றியே பேசிவருகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி 36 முதல் 37 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், நான் தேர்தலில் நிற்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். நான் எந்த சீட்டும் கேட்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.