வியாழன், 11 ஏப்ரல், 2019

தேர்தலுக்கான சிறப்பு டூடுள் வெளியிட்டு அசத்தியுள்ள கூகுள்! April 11, 2019

Image
இந்தியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதை ஒட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது. 
அதில், விரலில் மை வைத்தது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. அதை கிளிக் செய்து உள்ளே சென்றால், வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. முதல்முறை வாக்காளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், எந்தெந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது மற்றும் வேட்பாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 91 தொகுதிகளில், ஆயிரத்து 285 பேர் களத்தில் உள்ளனர். இதில் 89 பேர் பெண்கள் ஆவர். பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும், தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு சாவடிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் நேற்றே கொண்டு செல்லப்பட்டன.