பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான உரிய ஆவணங்களை கொடுத்தப் பிறகும், அதிகாரிகள் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுப்பதாக, சிவகங்கையை சேர்ந்த சாலையோர பழ வியாபாரி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்த்த சாலையோர பழ வியாபாரி சந்தியாகு, மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அவர் பழம் வாங்க வைத்திருந்த 77 ஆயிரத்து 100 ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லை என கூறி பறிமுதல் செய்துள்ளனர். அதன்பிறகு, உரிய ஆவணங்களை ஒப்படைத்தும் பணத்தை திருப்பி வழங்காமல், பறக்கும் படை அதிகாரிகள் அழைக்கழித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சந்தியாகு, மதுரை ஆட்சியர் அலுவலகம் சென்று, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். உடனடியாக, அதிகாரிகள் அவரை ஆட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
source ns7.tv