source ns7.tv
அமெரிக்க கடற்படையின் அதிநவீன multi-role MH-60 'Romeo' Seahawk ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
16,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 'Romeo' Seahawk ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதன் மூலம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை இந்தியா பெற உள்ளது.
நீர்மூழ்கி மற்றும் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் சக்தியை இந்த ரக ஹெலிகாப்டர்கள் பெற்றுள்ளன. இதுமட்டுமல்லாது கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர்களும் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Lockheed Martin நிறுவனத்தின் இந்த தயாரிப்பானது இந்திய கடற்படைக்கு கூடுதல் திறனை அளிக்கவுள்ளது.
தெற்கு ஆசியா மற்றும் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுத்து வரும் இந்திய நாட்டிற்கு 2.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகின் சக்திவாய்ந்த கடற்படை ஹெலிகாப்டர்:
தற்போது அமெரிக்க கடற்படையில் பிரதான நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு ஹெலிகாப்டரான multi-role MH-60 'Romeo' Seahawk, உலகின் மிகவும் மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கியதுள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர்.