Authors
தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையெனில், தமது சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள் என திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூருரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் மோவூர், திருவாலங்கோடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமது தேர்தல் அறிக்கைகளை பத்திரமாக வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறினார். தாம் வெற்றிபெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்றால், தாம் திரும்ப வரும்போது தமது சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள் என்று தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, சின்னவள்ளிகுளம், பெரியவள்ளிகுளம், சத்திரரெட்டியார்பட்டி, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்குசேகரித்தார். அவர் சென்ற இடங்களிலெல்லம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேமுதிக வெற்றி பெற்றால், கிராமப் பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என வேட்பாளர் அழகர்சாமி வாக்குறுதி அளித்தார்.
இதேபோன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி, பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். பாவடித்தோப்பு பிரச்சாரத் தொடங்கிய அவர், விருதுநகர் சாலை, காந்தி மைதானம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தார்.
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான பூண்டி.கலைவாணன் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் பொன்னாடை போர்த்தியும், ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர்.
source ns7.tv