சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் வரும் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னையிலிருந்து - சேலம் வரை சாலை அமைக்கப்படும் திட்டத்திற்காக நிலம் அளவிடும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பரமணியம் அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் எட்டு வழிச்சாலை திட்டத்தை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நாளை மறுநாள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் மரங்கள் வெட்டப்பட்டது குறித்தும் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவும் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv