வெள்ளி, 5 ஏப்ரல், 2019

இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே கடும் மோதல்! April 05, 2019

Image
திருச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், இந்து முன்னணியினருக்கும், திராவிடர்கழகத்தினருக்கும் இடையே மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திராவிடர்கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 
பின்னர் அங்கு வந்த போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த மணிகண்டன், போத்திராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்து சென்று கொண்டிருந்த திராவிடர் கழகத்தினரின் காரின் மீது இந்து முன்னணியினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

source ns7.tv