பண்டைய கிரேக்கத்தின், தாலமைக் பேரரசு காலத்தில் புதைக்கப்பட்ட பழங்கால கல்லறைகளை எகிப்திய தொல்பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு கெய்ரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகளில், எகிப்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள், 20க்கும் மேற்பட்ட பெண் எலும்புக்கூடுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களின், வளர்ப்பு பிராணிகளும் அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கல்லறைகளின் உட்புறமாக, அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
source ns7.tv