சனி, 4 மே, 2019

தமிழகத்தின் வேலை தமிழர்களுக்கே"..... இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்...! May 03, 2019

Image
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைகள் தமிழருக்கே தரப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சமூகவலைதளங்களில் TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழகுனர்கள் காலியிடங்களுக்கு 300  பேர் தேர்வானதாகவும், அந்த வாய்ப்பில் தமிழர்கள் யாருக்கும் வாய்ப்பு தரப்படாமல அனைத்து வேலை வாய்ப்புகளும் வடநாட்டவருக்கே கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகளுக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் அனைத்து காலியிடங்களும் வடமாநிலத்தவர்களை கொண்டு நிரப்பப்பட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.


இந்நிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் “இன ஒதுக்கலை எதிர்த்து தமிழர் மறியல்; தமிழருக்கு மறுப்பு; வெளியாரை வெளியேற்று” என்ற கோரிக்கைகளுடன் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90% பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும், திருச்சி பொன்மலை பணிமனையில் நியமிக்கப்பட்ட 300 பேருக்கான அனுமதியை ரத்து செய்து அவ்விடத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேகில் பரப்புரையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. 
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட காரணங்களை வலியுறுத்தி பிரபல வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக்கில் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils என்ற இரண்டு ஹேஷ்டேகுகளில் பதிவிட ஆரம்பித்தனர்.
TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.
இரண்டு ஹேஷ்டேகுகளும் இந்திய அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தது. மாலையில் ட்ரெண்டிங்கில் இருந்து இரண்டு டேகுகளும் சென்றுவிட்டாலும் இன்னும் பல சமூகவலைதளவாசிகள் இது குறித்து பதிவிட்டுவருகின்றனர்

source ns7.tv