தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் அனல் காற்று வீசி வருகிறது. பகலில் கடுமையான அனல் காற்று வீசியதால் மக்கள் வெளியில் நடமாடும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் இயல்பைவிட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில், வேலூரில் நேற்று உச்சகட்டமாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv