விருத்தாச்சலம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் தரையில் அமர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் திறந்த வெளியில் மண் தரையில் அமர்ந்து படிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் குடிநீர், கழிவறை, வகுப்பறை என எந்த அடிப்படை வசதியும் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.