சனி, 1 செப்டம்பர், 2018

வேளாண்மை துறையில் நிலவும் விதை தட்டுபாட்டால் சம்பா சாகுபடி தாமதம்! September 1, 2018

Image

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையில் நிலவும் விதை தட்டுபாட்டால் சம்பா சாகுபடி தாமதமாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான சம்பா சாகுபடி பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் போதிய அளவில் சென்றடையாததும், விதைகள் தட்டுப்பாடு காரணமாகவும் திட்டபடி சம்பா சாகுபடியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மாவட்டத்தில் நீண்ட நாள் ரகம் விதை நெல் இல்லை விரைவில் வந்துவிடும் எனக் கூறியே வேளாண்துறையினர் தட்டிக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். விதை நெல் வாங்க வேளாண் விற்பனை கிடங்குகளுக்கு சென்றவர்கள் வெறுங்கையோடு  திரும்ப வேண்டியிருப்பதாக கூறும் விவசாயிகள்,  தனியார் கடைகளில் 30 கிலோ விதை மூட்டையை 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் வறட்சியை தாக்குபிடித்து வளரும் சிஆர் ரக விதை நெல்லுக்கு தற்போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மை துறை காலம் கடத்தாமல் உடனடியாக விவசாயிகள் கேட்கும் விதை நெல்லை தட்டுபாடியின்றி வழங்கிட வகை செய்ய வேண்டும் என்பதே திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.