
சென்னை மதுரவாயலில் சாலையில் நடந்து செல்பவர்களை தாக்கி செல்போன், பணம் பறிக்கும் வழிப்பறி கும்பலை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்ட்டனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த துண்டலம் பகுதியில் கடந்த 31ம் தேதி சதிஷ் என்பவரை பீர் பாட்டிலால் அடித்து 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் தப்பியோடினர். அவர்களை மடக்கி பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த சிவா,விஷ்ணு, கிரிதரன், ராஜேஷ் மற்றும் குன்றத்தூரை சேர்ந்த மகேஷ் அருண் என்பது தெரியவந்தது.
இவர்கள் பல்வேறு இடங்களில் பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனங்களை திருடி பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 2 இருசக்கர வாகனம், 15 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்