செவ்வாய், 2 அக்டோபர், 2018

​நிறம் மாறிய ஆரஞ்சு! October 2, 2018

Image

வெட்டிவைக்கப்பட்ட ஆரஞ்சுப்பழம் ஒன்று ஊதா நிறத்திற்கு மாறிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாண்ட் பகுதியில் வாழ்து வரும் தாய் ஒருவர், அவரது மகனுக்கு சாப்பிடக்கொடுப்பதற்காக ஆரஞ்சுப்பழம் ஒன்றை வெட்டி வைத்துள்ளார். ஆனால், அதனை அவரது மகன் சாப்பிடவில்லை. அடுத்த நாள் காலையில் பார்த்தபொழுது, வெட்டி வைக்கப்பட்ட ஆரஞ்சு ஊதா நிறத்தில் மாறியிருந்ததை பார்த்து அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பின்னர், அதுகுறித்து அப்பகுதி ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து, வெட்டி வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சுப்பழம் மற்றும் அதனை வெட்ட பயன்படுத்த கத்தியையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துச்சென்று சோதனை செய்து பார்த்தனர். 

சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல், நிறம் மட்டும் மாறியத் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனினும், சில நாட்கள் அந்த ஆரஞ்சுப்பழத்தை சோதனை செய்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் இறுதியில் நிறமாற்றத்திற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டனர்.

ஆரஞ்சுப்பழத்தில் இருக்கும் anthocyanin என்ற பொருள், அண்மையில் கூர் தீட்டப்பட்ட கத்தியில் இருக்கும் இரும்பில் பட்டு இயற்கையாகவே நிறம் மாறிவிட்டது என தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற நிறமாற்றத்திற்கு வானிலை மற்றும் அந்த சுற்றுசூழலின் தட்பவெப்பமும் காரணிகளாக அமையும் எனவும் தெரிவித்தனர்.