
புதுச்சேரியில் தூய்மை திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் நாராயணசாமி, சாக்கடை கால்வாயில் வெறும் காலுடன் இறங்கி தூர்வாரியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் தூய்மை பணியை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்டபட்ட சாரம் பகுதியில் தூய்மை பணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது, மார்க்கெட் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டிருந்ததை கண்ட முதலமைச்சர் வெறும் காலுடன் இறங்கி அதனை அகற்றினார். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் அருகில் இருந்த ஊழியர்களிடம் இருந்து மண்வெட்டியை வாங்கி சாக்கடையை தூர்வாரியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.