செவ்வாய், 2 அக்டோபர், 2018

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்! October 2, 2018

Image

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க காவிரிப் படுகை மற்றும் சுற்றுவட்டாரங்களான நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அப்பணியை தற்காலிகமாக மத்திய அரசு கைவிட்டது. இதற்கிடையே காவிரிப்படுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை “ஒருங்கிணைந்த பெட்ரோலிய மண்டலமாக” மத்திய அரசு அறிவித்தது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் என தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. அதன்படி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி-க்கு ஓரிடமும், வேதந்தா நிறுவனத்துக்கு 2 இடங்களும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.