ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை, நவம்பர் ஒன்றாம் தேதி வரை கைது செய்ய, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ப.சிதம்பரம் கடந்த 2006ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த போது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முதலீடு விவகாரத்தில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.