உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா என்ற கிராமத்தில் அரசியல்வாதிகள் உள்ளே வரக்கூடாது என கிராமத்தினர் அறிவிப்புப்பலகை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக சீரான சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற நூதன போராட்டத்தில் அப்பகுதி கிராமத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ரோடு இல்லாமல் ஓட்டு இல்லை’ என்பதுபோன்றும் ‘அரசியல்வாதிகள் உள்ளே வரக்கூடாது’ என்பதுபோன்றும் பலகைகளை வைத்து போராட்டம் செய்துவருகின்றனர் அக்கிராமத்தினர்.
இதுகுறித்து கிராமத்தலைவரிடம் கேட்ட பொழுது பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படவில்லை எனவும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், அவர்களது கிராமத்திற்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் நிதி சரியாக வந்துசேர்வதில்லை எனவும் கிடைக்கும் சொர்ப்ப நிதியில் எந்தவிதமான வசதிகளையும் கிராமத்தினருக்கு ஏற்படுத்தித் தரமுடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.