source ns7.tv
தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனினும் 21 தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகள் து தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்ததால் அம்மூன்று தொகுதிகளை தவிர்த்து 18 தொகுதிகளுக்கு மட்டுமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்தது.
தற்போது, அந்த 3 தொகுதிகள் மீதுள்ள பிரச்சனைகள் ஓய்ந்துள்ள நிலையில் அதற்கும் சேரத்து தேர்தல் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் சூலூர் எம்.எல்.ஏ காலமானார். எனவே, அந்த தொகுதியும் காலியான சட்டமன்ற தொகுதி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 22ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 29 என்றும்,ஏப்ரல் 30ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் மே 2ம் தேதி என குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என கூறியுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளதால், அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும