புதன், 3 ஏப்ரல், 2019

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகம் வெளியானது எப்படி? April 03, 2019

source ns7.tv
Image
“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” எனும் புத்தகம் தீடீரென சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த புத்தகம் வெளியானது எப்படி?
ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.  அது தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  இந்நிலையில், "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" எனும் தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு தேர்தல் பறக்கும் படையினர் தடை விதித்தனர். மேலும், அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். 
புத்தகம் வெளியிட தடைவிதிக்கப்பட்டதாக  சமூக வலைதளங்களில் செய்தி பரவ தொடங்கியதை அடுத்து புத்தக வெளியீட்டீற்கு தடை எதுவும் விதிக்கவில்லை என விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு.  இதையடுத்து பாரதி புத்தகாலயத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.  மாலையில் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், தேர்தல் ஆணையம் உத்தரவிடாத நிலையில் புத்தகத்திற்கு தடை என்பது உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் மீது சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டார்.  புத்தகத்தை பார்த்து பயப்படும் கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 
தேர்தல் அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை, நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் புத்தகத்திற்கு விளம்பரம் போல் அமைந்து விட்டதாக அதனை வெளியிட்ட பாரதி புத்தகாலயம் தெரிவித்துள்ளது.