வெள்ளி, 5 ஏப்ரல், 2019

தேர்தல் ஆணையமும், வருமான வரி துறையும் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது:குமாரசாமி April 05, 2019

Image
இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரி துறையும் தங்கள் குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 
பெங்களூருவில் இருந்து ஹாசன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமியின் காரை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதேபோல் அண்மையில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். 
இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி, தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் சேர்ந்துக்கொண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக விமர்சித்தார். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் அதன் கடமையை செய்யட்டும் என்றும், அதற்காக எந்தவித அடிப்படை ஆதாரங்களின்றி தங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
source ns7.tv