தேர்தல் ஆணையம் மாநில அரசோடு இணைந்து ஒருதலைபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்னு குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் தேர்தலை தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், பாஜக இந்திய குடியரசு சட்டத்திற்கு புறம்பான கட்சி எனவும் நல்லக்கண்ணு விமர்சித்தார்.
தமிழக உரிமைகளை மத்திய அரசின் காலடியில் போட்டு முதலமைச்சர் பழனிசாமி அடிமை சேவகம் செய்து வருவதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுவை ஆதரித்து வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்காமல், பெட்ரோலியம் மண்டலமாக மத்திய அரசு மாற்றியதாக அவர் குற்றம் சாட்டினார்.
source ns7.tv