உலகில் முதன் முறையாக சீனாவில் சடலம் ஒன்றுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
18 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சிகிச்சையின் வெற்றியின் மூலம் மிக விரைவில் உயிருடன் இருப்பவர்களுக்கான தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சீனாவில் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் பல்வேறு நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதால எலி மற்றும் குரங்குகளில் இதே போன்ற தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.